துன்பம் பாபநாசம் செய்யும்.



துன்பத்தை யார் வெறுக்கிறார்களோ அவர்கள் இறையருளையும் பெற முடியாது. பாவத்தில் இருந்து விடுபடவும் முடியாது. துன்பமே ஞானத்தைத் தரும் அருமருந்தாகும்.

சில ஞானிகள் துன்பமே கிடைக்காதபட்சத்தில் தாமே ஒரு கிறுக்கனாக நடித்துப் பலரும் தம்மைப் பைத்தியம் எனத் திட்டுவதை ரசிப்பார்கள்.

உண்மை ஞானி தன்னை ஒருவர் புகழ்ந்தால் அழுவார். காரணம், அதன் மூலம் நமது மனம் திமிர் கொள்ளச் சாதகமாகிவிடும்.

ஒரு ஆயிரம் பேர் ஒரு மனிதனைப் புகழ்ந்துவிட்டால் அந்த புகழுக்கு உரியவர் மனதின் ஆற்றல் பல மடங்காகி விடும்.

புகழைப் பெற்ற மனம், புகழை நிலைநாட்டப் பல பாதுகாப்பு மனத்தை உருவாக்கிவிடும். அப்புறம் வெல்வது சிரமம். சித்தர்கள் காடுகளுக்கு ஓடியதற்குக் காரணமே மனிதப் புகழ்ச்சியைக் கண்டு மிரண்டதே!

எனவே, மனதை நாசம் செய்வது பாவத்தை நாசம் செய்வது!

பாபநாசம் ஆனால், பரமன் அருள் உண்டு. இறைவனோடு வாழ விரும்பினால் உங்களோடு வாழும் மனத்தை வெட்டுங்கள், வீடு பேறு அடையலாம்.
-சிவ மதி
https://www.facebook.com/groups/siddhar.science

Comments

Popular posts from this blog

Islamic Kataragama: இஸ்லாமிய கதிர்காமம்

Oneness: You're divine

Mount Shasta (Lemurian revelation) - Like Himalaya, it is pure and divine.