சித்தர்களும் புத்தர்களும்...

 

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

இதையே சித்தர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை 
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- ஆசான் திருமூலர்

சர்வ மத சித்தர்களும், புத்தர்களும், அருளாளர்களும், தூதர்களும் ஒரே கொள்கையையும், ஒரே கருத்தையும்தான் வலியுருத்தி உள்ளார்கள். ஆனால்... ஒரே நீரை வெவேறு இடத்தில் வெவேறு நபர் வெவ்வேறு பாத்திரத்தில் கொடுத்தது போல..! ஆனால் அதைப் பருகித் தாகத்தை தணித்துக் கொண்ட நபர்களோ.., தாகத்தை தணித்த நீரை மறந்துவிட்டு., நீரைக் கொடுத்த நபர்களையும், நீரைக் கொண்டு வந்த பாத்திரத்தையும் மட்டுமே பிடித்துக் கொண்டதால் இன்று மதங்களுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் இவ்வளவு வேறுபாடு..!

-SrLuxmi
https://www.facebook.com/groups/siddhar.science/
08/01/2012
தமிழும் சித்தர்களும் Thamil.Siththars
சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
Tamil Siddha Thamil Siththar தமிழ் தந்த சித்தர்கள்

Posted By 
Nathan Surya

Comments

Popular posts from this blog

Islamic Kataragama: இஸ்லாமிய கதிர்காமம்

Oneness: You're divine

Mount Shasta (Lemurian revelation) - Like Himalaya, it is pure and divine.